நால்வரி எலி அல்லது நால்வரி புல் எலி (Four-Striped Grass Mouse) என்பது முதுகில் நான்கு கறுப்பு வரிகள் கொண்ட கொறிணிகள் வரிசையில் மூரிடீ (Muridae) என்னும் எலிகள் குடும்பத்தில் இராப்டோமிசு (Rhabdomys) என்னும் பேரினத்தில் உள்ள ஓர் எலி வகையாகும். தென்னிந்தியாவில் காணப்படும் அணில்கள் போலும், வட அமெரிக்காவில் காணப்படும் சிப்மங்க் என்னும் அணில்வகை விலங்கு போலும், முதுகில் கறுப்பும் வெள்ளையுமாக கோடுகள் கொண்டுள்ள எலி இனமாகும். இவ்வெலி ஆப்பிரிக்காவில் பல நாடுகளில் காணப்படுகின்றது. உயர்ந்த மலைப் பகுதிகளிலும், 4600 மீ வரையிலான உயரத்திலும் காணப்படுகின்றது. ஆப்பிரிக்காவில் அங்கோலா, போட்சுவானா, காங்கோ, கென்யா, தான்சானியா, உகாண்டா, லெசோத்தோ, மலாவி, மொசாம்பிக், நமீபியா, தென் ஆப்பிரிக்கா, சாம்பியா, சிம்பாபுவே ஆகிய நாடுகளில் காணலாம். புற்கள் இடையே உணவு தேடுவதால் நால்வரி புல் எலி என்றும் பெயர் கொண்டது.
வளர்ந்த நால்வரி எலி சராசரியாக 51 கிராம் எடை கொண்டிருக்கும். இது ஏறத்தாழ 5 ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன. பொதுவான உடல் வெப்பநிலை 37°செ இருக்கும். இவ்வெலிகள் 29 நாட்களுக்கு ஒருமுறை இனப்பெருக்கம் செய்கின்றன. கருவுற்றிருக்கும் காலம் (சினைக் காலம்) 25 நாட்கள். ஆண் எலிகள் 64 நாட்களில் இனப்பெருக்கத்திற்கான முதிர்ச்சி அடைகின்றன, ஆனால் பெண் எலிகள் 42 நாட்களிலேயே முதிர்ச்சி அடைகின்றன. குட்டிகளின் எண்ணிக்கை சராசரியாக 6. பிறக்கும்பொழுது குட்டிகளின் எடை சராசரியாக 3 கிராமே இருக்கும்[1] [2].
நால்வரி எலி அல்லது நால்வரி புல் எலி (Four-Striped Grass Mouse) என்பது முதுகில் நான்கு கறுப்பு வரிகள் கொண்ட கொறிணிகள் வரிசையில் மூரிடீ (Muridae) என்னும் எலிகள் குடும்பத்தில் இராப்டோமிசு (Rhabdomys) என்னும் பேரினத்தில் உள்ள ஓர் எலி வகையாகும். தென்னிந்தியாவில் காணப்படும் அணில்கள் போலும், வட அமெரிக்காவில் காணப்படும் சிப்மங்க் என்னும் அணில்வகை விலங்கு போலும், முதுகில் கறுப்பும் வெள்ளையுமாக கோடுகள் கொண்டுள்ள எலி இனமாகும். இவ்வெலி ஆப்பிரிக்காவில் பல நாடுகளில் காணப்படுகின்றது. உயர்ந்த மலைப் பகுதிகளிலும், 4600 மீ வரையிலான உயரத்திலும் காணப்படுகின்றது. ஆப்பிரிக்காவில் அங்கோலா, போட்சுவானா, காங்கோ, கென்யா, தான்சானியா, உகாண்டா, லெசோத்தோ, மலாவி, மொசாம்பிக், நமீபியா, தென் ஆப்பிரிக்கா, சாம்பியா, சிம்பாபுவே ஆகிய நாடுகளில் காணலாம். புற்கள் இடையே உணவு தேடுவதால் நால்வரி புல் எலி என்றும் பெயர் கொண்டது.
வளர்ந்த நால்வரி எலி சராசரியாக 51 கிராம் எடை கொண்டிருக்கும். இது ஏறத்தாழ 5 ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன. பொதுவான உடல் வெப்பநிலை 37°செ இருக்கும். இவ்வெலிகள் 29 நாட்களுக்கு ஒருமுறை இனப்பெருக்கம் செய்கின்றன. கருவுற்றிருக்கும் காலம் (சினைக் காலம்) 25 நாட்கள். ஆண் எலிகள் 64 நாட்களில் இனப்பெருக்கத்திற்கான முதிர்ச்சி அடைகின்றன, ஆனால் பெண் எலிகள் 42 நாட்களிலேயே முதிர்ச்சி அடைகின்றன. குட்டிகளின் எண்ணிக்கை சராசரியாக 6. பிறக்கும்பொழுது குட்டிகளின் எடை சராசரியாக 3 கிராமே இருக்கும் .