ஆசிய காட்டுக் கழுதை (Asiatic wild ass)[2] என்பது குதிரைக்குடும்பத்தைச் சேர்ந்து ஒரு கழுதை. இது ஆசியா கண்டத்தைச் சேர்ந்த விலங்கு ஆகும். இது வேகமாக ஓடக்கூடிய பாலூட்டி. இவை மணிக்கு 64 கிமீ வேகத்தில் ஓடக்கூடியவை. இவை இந்தியாவின் கட்ச் பாலைவனப் பகுதியின் உவர் நிலங்களில் அரிதாக காணப்படுகின்றன. இவை ஆப்பிரிக்க காட்டுக் கழுதையை நெருக்கமாக ஒத்துள்ளன.
இவை குதிரையைவிட சிறியதாகவும், கழுதையைவிட பெரியதாகவும் இருக்கும். உடல் சாம்பல் அல்லது மஞ்சள்பழுப்பு நிறத்தில் இருக்கும். வயிற்றின் அடிபாகம் வெண்பட்டைகளோடு இருக்கும். கருப்பு முனையுடன் கூடிய கூர்மையான காதுகளை உடையது. அடர்ந்த பழுப்பு நிறமுடைய பிடரிமயிர் கொண்டவை.
ஆசிய காட்டுக் கழுதை (Asiatic wild ass) என்பது குதிரைக்குடும்பத்தைச் சேர்ந்து ஒரு கழுதை. இது ஆசியா கண்டத்தைச் சேர்ந்த விலங்கு ஆகும். இது வேகமாக ஓடக்கூடிய பாலூட்டி. இவை மணிக்கு 64 கிமீ வேகத்தில் ஓடக்கூடியவை. இவை இந்தியாவின் கட்ச் பாலைவனப் பகுதியின் உவர் நிலங்களில் அரிதாக காணப்படுகின்றன. இவை ஆப்பிரிக்க காட்டுக் கழுதையை நெருக்கமாக ஒத்துள்ளன.