dcsimg

கொம்புப்பூச்சி ( Tamil )

provided by wikipedia emerging languages

கொம்புப்பூச்சி (Treehoppers (more precisely typical treehoppers to distinguish them from the Aetalionidae) and thorn bugs) என்பவை மெம்ராசிடி என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்சிக் குழுவாகும். இதில் 3,200 இனங்களும், 400 பேரனங்களும் கண்டறியப்பட்டுள்ளன.[1] இவை அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன; இவற்றில் ஐரோப்பாவில் இருந்து மூன்று இனங்கள் மட்டும் அறியப்பட்டுள்ளன.

விளக்கம்

இவை தாவரச் சாறுண்ணிகள் ஆகும். முருங்கை உள்ளிட்ட மரங்களில் இந்த வகைப் பூச்சிகள் காணப்படும். இவை நம்ப முடியாத தொலைவுக்குத் தாவக்கூடியவை. இவற்றில் சில வகைகளின் உணர் கொம்புகள் மாட்டுக் கொம்புகளைப் போன்ற தோற்றத்திலும், சில வகைகளுக்கு தலையில் நீண்டிருக்கும் கொம்பு போன்ற பகுதி முள் போலவும் இருப்பதால் இவை கொம்புப்பூச்சி என்று அழைக்கப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

  1. Treehoppers. Dr. Metcalf. NCSU Libraries. North Carolina State University.
  2. ஆதி வள்ளியப்பன் (2018 பெப்ரவரி 24). "பூச்சிக்கும் உண்டா கொம்பு?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 24 பெப்ரவரி 2018.

மேலும் படிக்க

  • Godoy, C., et al. Membrácidos de la América Tropical (Treehoppers of Tropical America(bilingual, English and Spanish).). Santo Domingo de Heredia: INBIO, Inst. Nacional de Biodiversidad. 2006. ISBN 9968-927-10-49968-927-10-4

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கொம்புப்பூச்சி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

கொம்புப்பூச்சி (Treehoppers (more precisely typical treehoppers to distinguish them from the Aetalionidae) and thorn bugs) என்பவை மெம்ராசிடி என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்சிக் குழுவாகும். இதில் 3,200 இனங்களும், 400 பேரனங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இவை அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன; இவற்றில் ஐரோப்பாவில் இருந்து மூன்று இனங்கள் மட்டும் அறியப்பட்டுள்ளன.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்