அவுரி (ஒலிப்பு ) அல்லது நீலி என்னும் செடி தாவரவியலில் (நிலைத்திணை இயலில்) இண்டிகோஃவெரா டின்க்டோரியா (Indigofera tinctoria) என்று அழைக்கப்படுகின்றது. இது பேபேசியே (Fabaceae) என்னும் குடும்பத்தில் இண்டிகோஃவெரா (Indigofera) என்னும் இனத்தைச் சேர்ந்த செடி. இதன் பொது ஆங்கிலப் பெயர் ட்ரூ இண்டிகோ (true indigo). இச்செடியில் இருந்து முன்னர் நீல நிறம் (ஊதாநிறம்) கொண்ட சாயம் எடுத்தனர். இச்செடி எங்கிருந்து தோன்றியது என்று உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், இது வெப்பமண்டலப் பகுதிகளிலும், ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது. நெடுங்காலமாக உலகெங்கிலும் ஊதா நிறச் சாயத்திற்கு இச்செடியைப் பயன்படுத்தினர். இன்று செயற்கையாக வேதிப்பொருட்கள் வழி நீல நிறச் சாயம் பெற்றாலும், இன்றும் இதன்வழி பெறும் நிறம்தரும் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளது.
இச்செடி (புதர் வகையான செடி) ஏறத்தாழ 2 மீட்டர் வளரக்கூடியது. வானியல் சூழலைப் பொறுத்து இப்புதர்ச்செடி ஆராண்டுத் தாவரமாகவோ ஈராண்டுத் தாவரமாகவோ, நிலையாக இருக்கும் தாவரமாகவோ உள்ளது. இச்செடியின் இலைகள் சற்றே வெளிறிய பச்சை நிறத்துடன் கூட்டிலையாக உள்ளன. இதன் பூக்கள் நீலம் கலந்த இளஞ்சிவப்பு நிறத்தில் இணராக உள்ளன. இச் செடியின் இலைகளை நீரில் ஊற வைத்து புளிக்கச்செய்து சாயத்தை எடுக்கின்றனர். இப்படி புளிக்க வைப்பதால் அதில் உள்ள கிளைக்கோசைடு இண்டிக்கான் (glycoside indican) என்னும் பொருளை ஊதாச் சாயமாக மாறுகின்றது. இந்தச் சாயத்தின் பெயர் இண்டிகோட்டின் (indigotin) என்னும் ஊதாச்சாயம் ஆகும்.
அவுரி (Indigofera tinctoria) ஒரு மருத்துவ மூலிகையாகவும் பயன்படுகின்றது.
பாம்புக்கடிக்கு முதலுதவி, காமாலை, தோல் நோய்கள், ஒவ்வாமை (அலர்ஜி).