dcsimg

வெண்குடைக் காளான் ( Tamil )

provided by wikipedia emerging languages

வெண்குடைக் காளான் (Boletus edulis) (ஆங்கிலம்: செப், பென்னி மெத்தப்பம், போரினோ அல்லது போர்சினி) போலத்தசு பேரினம் சார்ந்த ஒரு பேசிடியோமைசீட் பூஞ்சை ஆகும். இது ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா எங்கணும் வடக்கு அரைக்கோளத்தில் பரவலாகக் காணப்படுகிறது. இது இயல்பாகவே தென் அரைக்கோளத்தில் வளர்வதில்லை. என்றாலும் இது தென் ஆப்பிரிக்காவிலும் ஆத்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் பிரேசிலிலும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.முன்பு போலத்தசு எடிலசு இனத்தின் வகைமைகளாகக் கருதிய மிக நெருக்கமான பல ஐரோப்பியக் காளான்கள் இன்று மூலக்கூற்று தொகுதிமரபாய்வால் தனித்த தாவர இனமாகக் கண்டறியப்பட்டுள்ளன. இதேபோல, முன்பு பல தாவர இனங்களாகக் கருதிய காளான்கள் உண்மையில் போலத்தசு எடுலிசு இனத்தோடு நெருங்கினவாகக் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வகையில் மேற்கு வட அமெரிக்காவின் இனமான கலிபோர்னியா பெரும்போலத்தே ( போலத்தசு எடுலிசு வகை. கிரேண்டேடுலிசு (grandedulis)) ஆக வகைப்படுத்தி 2007 இல் கண்டறியப்பட்டுள்ளது. இது அடர்ந்த நிறமுள்ள பெரிய பழவுடல் வகையாகும்.

இந்தக் காளான் இலையுதிர் காடுகளிலும் ஊசியிலைக் காடுகளிலும் வளர்ப்பு மரங்களிலும் மர நிலத்தடி வேர்களில் பூஞ்சத் திசுக்களால் கவித்து வேர்ப்பூஞ்சைகளாக இணைவாழ்வில் ஈடுபடுகிறது. இந்தப் பூஞ்சை கோடையிலும் இலையுதிர் காலத்திலும் விதைத்துள் தாங்கிய பழவுடலை வெளியிடுகிறது. இப்பழவுடல் பெரிய பழுப்புநிறக் குடையைக் கொண்டுள்ளது. இது சிலவேளைகளில் 35 செமீ விட்டத்துடன் 3கிகி எடை வரை வளரும். இதில் பிற போலத்தே காளான்களைப் போல குடையின் அடிப் பகுதியில். விதைத்தூள்பைகளுக்கு மாற்றாக, அதிலிருந்து தண்டின் ஊடாகக் குழல்கள் கீழிறங்கும்; முதிர்ந்த விதைத்தூள்கள் திறந்த குழல்களில் இருந்து அல்லது அதன் புரை(துளை)களில் இருந்து வெளியேறும். போலத்தசு எடுலிசுப் பழவுடலின் இத்துளை அமைந்த மேற்பரப்பு இளமையில் வெண்ணிறமாகவும் முதிர்ந்ததும், பசுமஞ்சளாகவும் மாறும். 25 செமீ உயரமும் 10 செமீ விட்டமும் உள்ள இதன் தண்டின் நிறம், வெண்மையாகவோ மஞ்சளாகவோ அமையும். தண்டின் ஒரு பகுதி இணையான, புடைத்த வலைப்பின்னல் உறையுடன் அமையும்.

பலவகை உணவுகளில் உட்கூறாக அமையும் போ. எடுலிசு பெறுமதி வாய்ந்த ஓர் உண்ணும் காளான் ஆகும். இது வழக்கமாக நறுஞ்சுவைச்சாற்றிலும் கூட்டாகவும் பிற அடுமுறை உணவுகளிலும் சமைத்து உண்ணப்படுகிறது. இந்தக் காளான் கொழுப்பு குறைந்தது; செரிக்கும் மாப்பொருள்களும் உயரளவு புரதமும் உயிர்ச்சத்துகளும் கனிமச்சத்துகளும் நார்ச்சத்துகளும் கொண்டது. இது வணிகவியலாக விற்கப்பட்டாலும் இதைப் பயிரிடுவது அரிது. நடுவண் ஐரோப்பாவிலும் தென் ஐரோப்பாவிலும் வடக்கு ஐரோப்பாவிலும் இலையுதிர் காலத்தில் மட்டும் கிடைக்கும் இது உலர்த்திப் பதப்படுத்தி பொட்டணமிட்டு உலகெங்கும் அனுப்பி விற்கப்படுகிறது. உலர்நிலையிலும் இதன் வாசம் குறைவதில்லை. போ. எடுலிசு ஊறுகாயிட்டு விற்கும் காளான்களில் ஒன்றாகும்.

வகைபாட்டியல்

வெண்கழுத்துப் பட்டையும் கருப்பு மேலங்கியும் அணிந்த மனிதனின் தலை, மேலுடலின் பக்கவாட்டுத் தோற்றம்.
முதலில் பியேர் புல்லார்டு போ. எடுலிசு காளான் இனத்தை 1782 இல் விவரித்தார்.

போலத்தசு எடுலிசு முதலில் 1782 இல் பிரெஞ்சு தாவரவியல் அறிஞராகிய ழீன் பாப்திசுத்தே பிராங்குவாயிசு பியேர் புல்லார்டுவால் விவரிக்கப்பட்டது. இது இன்றும் தன் முதற்பெயரைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.[2]

போ. எடுலிசு போலத்தசு பேரினத்தின் வகைமை இனமாகும்..[3][4]

விவரிப்பு

தடித்த தண்டுள்ள காளானின் இருசம வெட்டு அரைப்பகுதிகள்.
வெண்சதைப்பற்றையும் அகன்ற தண்டையும் குடையடியில் உள்ல விதைத்தூள் குழலையும் காட்டும் வெட்டுமுகப் படம்
A brown-capped mushroom lying flat on the grass with a white or light-brown coloured stem that gradually gets thicker, so as to roughly resemble the shape of a club.
A brown-capped mushroom with a short, stout stem that is thickest in the middle, and whose thickness approaches the width of the cap it supports.
தண்டின் வடிவம் கதை அல்லது சுத்தியல் வடிவம் முதல் நடுவில் குமிழ் வடிவம் வரை அமையலாம்

உறவுள்ள பிற இனங்கள்

A mushroom with an orange-brown cap and a yellowish underside that somewhat resembles a sponge. The light-yellow stem is about half the thickness of the caps diameter. This mushroom is growing on the ground, surrounded by twigs, leaves, log and other forest floor debris.
B. edulis var. grandedulis
A mushroom with a reddish-brown cap that is curled upwards to reveal a cream-coloured porous underside that somewhat resembles a sponge. The thick stipe has a pinkish hue, and its thickness is a little less than half of the cap's diameter. The mushroom has been pulled from the ground and the end of its stipe is a whitish colour caused by hyphal tufts, and is embedded with dirt and other small twigs.
B. regineus
Boletus edulis, fresh[5]
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 80 kcal 340 kJ மாப்பொருள் {{{carbs}}} கொழுப்பு1.70 g புரதம் 7.39 g தயமின் 0.105 mg 8%ரிபோஃபிளாவின் 0.092 mg 6%நியாசின் 6.07 mg 40%பான்டோதெனிக் அமிலம் 2.64 mg 53%உயிர்ச்சத்து பி6 0.051 mg4%இலைக்காடி (உயிர்ச்சத்து பி9) 290 μg 73%உயிர்ச்சத்து சி 4.21 mg7%கால்சியம் 1.195 mg0%இரும்பு 0.739 mg6%பாசுபரசு 22.26 mg3%பொட்டாசியம் 203.3 mg 4%துத்தநாகம் 4.172 mg42% ஐக்கிய அமெரிக்கா அரசின்
வயதுக்கு வந்தவருக்கான,
உட்கொள்ளல் பரிந்துரை .
மூலத்தரவு: USDA Nutrient database

மேற்கோள்கள்

  1. "Boletus edulis Bull. 1782". MycoBank. International Mycological Association. பார்த்த நாள் 2010-10-21.
  2. Bulliard JBF. (1782) (in French). Herbier de la France. Vol 2. Paris, France: P.F. Didot. பக். 49–96, plate 60. https://archive.org/stream/herbierdelafranc4996bull#page/22/mode/2up. பார்த்த நாள்: 2009-11-24.
  3. Singer R. (1986). The Agaricales in Modern Taxonomy (4th rev. ). Koenigstein, Germany: Koeltz Scientific Books. பக். 779. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-87429-254-1.
  4. The Boletes of Michigan. Ann Arbor, Michigan: University of Michigan Press. 1971. பக். 221. http://quod.lib.umich.edu/cgi/t/text/pageviewer-idx?c=fung1tc;cc=fung1tc;idno=agk0838.0001.001;frm=frameset;view=image;seq=229;page=root;size=s. பார்த்த நாள்: 2010-12-02.
  5. Nutritional values are based on chemical analysis of Turkish specimens, conducted by Çaglarlrmak and colleagues at the Agricultural Faculty, Food Engineering Department, Gaziosmanpaşa University. Source: "Nutritional value of edible wild mushrooms collected from the Black Sea region of Turkey". Micologia Aplicada International 14 (1): 1–5. 2001. http://www.redalyc.org/pdf/685/68514101.pdf.

பாட நூல்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

வெண்குடைக் காளான்: Brief Summary ( Tamil )