dcsimg

மஞ்சள் கால் காடை ( Tamil )

provided by wikipedia emerging languages

மஞ்சள் கால் காடை (Yellow-legged Buttonquail) இவை காடை வகையைச் சாராத ஒரு சிறிய பறவை பிரிவுகளில் உள்ள கருங்காடை (Buttonquail) இனத்தில் சேர்க்கப்பட்ட பறவையாகும். பொதுவாக இந்தியத் துணைக்கண்டம், மற்றும் தென்கிழக்காசியாவில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படுகிறது. இவற்றில் துணைப்பிரிவாக இரண்டு பறவைகள் இந்தியா, பாக்கித்தான், நேபாளம், அந்தமான் தீவுப்பகுதி, மியான்மர், இந்தோனேசியா, மற்றும் கிழக்கு சீனா போன்ற இடங்களில் காணப்படுகிறது. இனப்பெருக்கத்திற்காக இவை கொரியத் தீபகற்பம் மற்றும் ரசியாவின் தென்கிழக்குப் பகுதிக்குச் இடப்பெயர்ச்சி செய்கிறது. [2]

மஞ்சள் கால் காடையில் பெண் பறவை பெரியதாகவும், பல வண்ணத்தோகையைக் கொண்டும் காணப்படுகிறது. இவற்றில் பெண் பறவை பல ஆண்களுடன் தொடர்பில் உள்ளது. பெண் காடைகள் இனப்பெருக்கக் காலம் அல்லாத வேளைகளில் இதன் உடல் மெருகேறிய வண்ணம் கொண்டு காணப்படுகிறது. பெண் காடைகள் சேர்க்கை நேரத்தில் ஆண் காடைகளுக்கு உணவு எடுத்துவந்து கொடுக்கிறது. அதே வாளையில் இவ்வினத்தில் ஆண் காடைகளே அடைகாக்கும் குணம் கொண்டு காணப்படுகிறது. குஞ்சு பொரிப்பதற்கு 12 நாட்கள் அடைக்காக்க வேண்டியுள்ளது.[3]

மேற்கோள்கள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

மஞ்சள் கால் காடை: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

மஞ்சள் கால் காடை (Yellow-legged Buttonquail) இவை காடை வகையைச் சாராத ஒரு சிறிய பறவை பிரிவுகளில் உள்ள கருங்காடை (Buttonquail) இனத்தில் சேர்க்கப்பட்ட பறவையாகும். பொதுவாக இந்தியத் துணைக்கண்டம், மற்றும் தென்கிழக்காசியாவில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படுகிறது. இவற்றில் துணைப்பிரிவாக இரண்டு பறவைகள் இந்தியா, பாக்கித்தான், நேபாளம், அந்தமான் தீவுப்பகுதி, மியான்மர், இந்தோனேசியா, மற்றும் கிழக்கு சீனா போன்ற இடங்களில் காணப்படுகிறது. இனப்பெருக்கத்திற்காக இவை கொரியத் தீபகற்பம் மற்றும் ரசியாவின் தென்கிழக்குப் பகுதிக்குச் இடப்பெயர்ச்சி செய்கிறது.

மஞ்சள் கால் காடையில் பெண் பறவை பெரியதாகவும், பல வண்ணத்தோகையைக் கொண்டும் காணப்படுகிறது. இவற்றில் பெண் பறவை பல ஆண்களுடன் தொடர்பில் உள்ளது. பெண் காடைகள் இனப்பெருக்கக் காலம் அல்லாத வேளைகளில் இதன் உடல் மெருகேறிய வண்ணம் கொண்டு காணப்படுகிறது. பெண் காடைகள் சேர்க்கை நேரத்தில் ஆண் காடைகளுக்கு உணவு எடுத்துவந்து கொடுக்கிறது. அதே வாளையில் இவ்வினத்தில் ஆண் காடைகளே அடைகாக்கும் குணம் கொண்டு காணப்படுகிறது. குஞ்சு பொரிப்பதற்கு 12 நாட்கள் அடைக்காக்க வேண்டியுள்ளது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்