dcsimg

ஓநாய் சிலந்தி ( Tamil )

provided by wikipedia emerging languages

ஓநாய் சிலந்திகள் (wolf spiders) லைக்கோசிடே குடும்பத்தைச் சார்ந்தவை. பண்டைய கிரேக்க வார்த்தையான "λύκος" இன் பொருள் "ஓநாய்". இவை வலிமையான மற்றும் சுறுசுறுப்பான வேட்டையாடும் திறனுடன், சிறந்த கண் கூர்மையையும் கொண்டவை. இவை பெரும்பாலும் தனிமையில் வாழ்தலையும் மற்றும் தனியாக வேட்டையாடுவதையுமே விரும்புகின்றன. வலைகள் பின்னுவதில்லை. ஓநாய் சிலந்திகள் "பண்ணை வலை சிலந்திகள்" (பிசாரிடே குடும்பம்) போலவே இருக்கும், ஆனால் ஓநாய் சிலந்திகள் தங்கள் முட்டைகளை தங்கள் உடம்பிலுள்ள பைகளில் வைத்துக்கொள்ளும். முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்ததும்,இவை தன்குஞ்சுகளை தனியே விடாமல் அவற்றை சில நாட்களுக்கு தன்னுடனே வைத்து அடைகாக்கின்றன. சில நாட்கள் அடைகாத்த பின் அந்த தாய் சிலந்தி இறந்து விடுகின்றது. பின் அந்த குஞ்சுகள் அனைத்தும் அதன் தாய் சிலந்தியை உண்கின்றன.

கண்கள் அமைப்பு

ஓநாய் சிலந்தி எட்டு கண்களையுடையவை. அவற்றில் பெரியதாக உள்ள இரண்டு கண்களே முக்கியமானவை.

உசாத்துணைகள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

ஓநாய் சிலந்தி: Brief Summary ( Tamil )