வண்ணத் தவளை[3] (Uperodon taprobanicus), இது இலங்கை பெரும் தவளை, பொதுவான பெரும் தவளை , இலங்கை வண்ணத் தவளை, இலங்கை கலோவுளா, இந்திய வண்ணத் தவளை, அல்லது வண்ணக் கோளவடிவ தவளை என்பது நேபாளம், வங்காளதேசம், தெற்கு மற்றும் கிழக்கு இந்தியா, மற்றும் இலங்கை [2] போன்ற பகுதிகளில் சுமார் 1300 மீட்டர் உயரமான பகுதியிகளில் காணப்படும் கூர்வாய்த் தவளை இனமாகும். இது ஒரு பொதுவான இனமாகும். இது முதலில் கலோவு லா புல்ச்ரா, தவளை இனத்தின் ஒரு துணையினமாக விவரிக்கப்பட்டது. [4] பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதை " தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் " என்று பட்டியலிடுகிறது.
இந்த குண்டான தவளை இனமானது மூக்கிலிருந்து மலவாய்வரை சுமார் 75 மில்லிமீட்டர்கள் (3.0 in) நீளமுள்ளதாக இருக்கிறது. பெண் தவளைகள் ஆண் தவளைகளைவிட சற்று பெரியதாக இருக்கும். முதுகெலும்பின் மேற்பரப்பு பகுதியில் சாம்பல்-கறுப்பு நிறமானதாக இருக்கும். இதன் இருபுறமும் சிவப்பு-பழுப்பு நிறத் திட்டுகள் சமச்சீர் வடிவத்துடன், கண்ணின் பின்புறத்திலிருந்து முன் சினையின் அடிப்பகுதி வரை நீண்ட வண்ணக் திட்டுக்குள் இருக்கும். இதன் அடிப்பகுதியானது வெளிர் மஞ்சள்-சாம்பல், கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். இனப்பெருக்க காலத்தில், ஆண் தவளைகளுக்கு தொண்டையில் கருமையான திட்டு உருவாகிறது. [4]
இந்த தவளையினமானது இலங்கை, இந்தியா, வங்காளதேசம், நேபாளம் போன்ற நாடுகளை பூர்வீகமாகக் கொண்டது. [5] வண்ணத் தவளை இனமானது தரைக்கடியில் வளைவாழ்க்கை வாழும் இனமாகும். இது இலைக் குப்பைகளில், தளர்வான மண்ணில் அல்லது விழுந்த மரக்கட்டைகளுக்கு அடியில் நாளைக் கழிக்கிறது. ஆனால் இது மரக் கிளைகளிலும் ஏறக்கூடியது. இது வறண்ட காடுகள், தென்னை மற்றும் இரப்பர் தோப்புகள், ஈரநிலங்கள், நெல் வயல்கள், குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள பகுதிகள் போன்ற பகுதிகளில் வாழ விரும்பக்கூடியது.
இந்த தவளை பல்வேறு வகையான பூச்சிகளை உணவாக கொள்கிறது. இது மழைக்காலத்தின் துவக்கத்தில் இனப்பெருக்கம் செய்கிறது. மேலும் ஆண் தவளைகள் பொருத்தமான நீர்நிலைகளில் இருந்து கலவிக்கு பெண்தவளைகளை அழைத்து ஒலி எழுப்புகின்றன. இதன் முட்டைகள் நீரின் மேற்பரப்பில் ஒற்றை அடுக்கில் மிதக்கின்றன. இதன் தலைப்பிரட்டைகள் கருப்பு நிறம் கொண்டவை. [4]
இந்த தவளை பரந்த எல்லையில் வாழக்கூடியதாக உள்ளது. மேலும் இந்த தவளைகளின் தொகையானது நியாயமான அளவாகத் தெரிகிறது. ஐ.யூ.சி.என் இதை " குறைந்த அக்கறை " என்று மதிப்பிடுகிறது, ஏனெனில் இதன் எண்ணிக்கை வீழ்ச்சி வீதம் ஏதேனும் இருந்தால், இதை மிகவும் அச்சுறுத்தலுக்கு ஆளான பிரிவில் பட்டியலிடுவதை நியாயப்படுத்த போதுமான காரணங்கள் இல்லை. இந்த தவளை இது வாழும் எல்லைக்குள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலால் பெரும்பாலும் அழிவிற்கு உள்ளாகிறது. இது எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் இதன் வாழ்விட சீரழிவு மற்றும் இது இனப்பெருக்கம் செய்யும் நீர்நிலைகளானது வேளாண் வேதிப்பொருட்களால் மாசுபடுவதே என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வண்ணத் தவளை (Uperodon taprobanicus), இது இலங்கை பெரும் தவளை, பொதுவான பெரும் தவளை , இலங்கை வண்ணத் தவளை, இலங்கை கலோவுளா, இந்திய வண்ணத் தவளை, அல்லது வண்ணக் கோளவடிவ தவளை என்பது நேபாளம், வங்காளதேசம், தெற்கு மற்றும் கிழக்கு இந்தியா, மற்றும் இலங்கை போன்ற பகுதிகளில் சுமார் 1300 மீட்டர் உயரமான பகுதியிகளில் காணப்படும் கூர்வாய்த் தவளை இனமாகும். இது ஒரு பொதுவான இனமாகும். இது முதலில் கலோவு லா புல்ச்ரா, தவளை இனத்தின் ஒரு துணையினமாக விவரிக்கப்பட்டது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதை " தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் " என்று பட்டியலிடுகிறது.