dcsimg

கடற்கீரி ( Tamil )

provided by wikipedia emerging languages

கடல் கீரி (Enhydra lutris, Sea otter) என்பது ஒரு கடல் பாலூட்டியாகும். இது வடபசிபிக் பெருங்கடலின் வடக்கு மற்றும் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் காணப்படுகிறது. வயது வந்த கடல் கீரிகள் பொதுவாக 14 முதல் 45 கிலோ வரை எடையுடன் காணப்படுகின்றன. இவையே முஸ்டேலிடாயே குடும்பத்தின் மிகப்பெரிய உறுப்பினர்களாக உள்ளன. ஆனால் கடல் பாலூட்டிகள் மத்தியில் சிறியனவாகவே உள்ளன. பெரும்பாலான கடல் பாலூட்டிகளை போலல்லாமல், கடல் கீரியின் முதன்மை வடிவக் காப்பானது வழக்கத்திற்கு மாறான தடிமனான உரோமப் பாதுகாப்பாகும். இதுதான் விலங்கு இராச்சியத்திலேயே அடர்த்தியானதாகும். இதனால் தரையில் நடக்க முடியும். முழுவதும் பெருங் கடலில் வாழக்கூடிய தன்மை இதற்கு உள்ளது.

கடல் கீரி கடற்கரையோர சூழ்நிலைகளில் வாழ்கிறது. அங்கிருந்து கடல் தளத்திற்கு இரை தேட செல்கிறது. இது பெரும்பாலும் கடலில் காணப்படும் முதுகெலும்பிலிகளை உண்கிறது. அவை கடல் முள்ளெலிகள், பல்வேறு மெல்லுடலிகள் மற்றும் கிரஸ்டசீன்கள், மற்றும் சில மீன் இனங்கள் ஆகும். இவற்றின் உணவு தேடும் மற்றும் உண்ணும் பழக்கவழக்கங்கள் பல்வேறு வகைகளில் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. ஒன்று, இரையின் ஓட்டை உடைக்க இது கற்களைப் பயன்படுத்துகிறது. இவ்வாறு செய்யும் சில பாலூட்டி இனங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் பெரும்பாலான வாழ்விடத்தில் இது ஒரு மைய உயிரினமாகச் செயல்படுகிறது. இது அவ்விடங்களில் வாழவில்லை எனில் கடல் முள்ளெலிகள் எண்ணிக்கையில் அதிகமாகி கெல்ப் காடு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதன் உணவானது மனிதர்களால் விரும்பி உண்ணப்படும் கடல் உயிரினங்களாக உள்ளது. இதனால் இவற்றிற்கும் மீன்பிடிப்பவர்களுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது.

கடல் கீரிகளின் எண்ணிக்கை ஒரு காலத்தில் 150,000–300,000 வரை இருந்ததாக கணக்கிடப்பட்டது. ஆனால் இவற்றின் ரோமத்திற்காக 1741 முதல் 1911 வரை ஏராளமாக வேட்டையாடப்பட்டன. இதனால் உலகளவில் இவற்றின் எண்ணிக்கை 1,000–2,000 வரை என்றானது.[3] இவற்றின் வேட்டைக்கு எதிரான சர்வதேசத் தடை, பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் மறு அறிமுக திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக இவற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது. தற்போது இந்த இனம் இதன் முந்தைய அளவில் மூன்றில் இரண்டு பங்கு இடத்தில் பரவி உள்ளது. அலேடியன் தீவு மற்றும் கலிபோர்னியா ஆகிய இடங்களில் இவற்றின் எண்ணிக்கை தற்போது குறைந்து விட்டது. எனினும் பரவலான இடங்களில் இவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பு ஒரு வெற்றியாக கருதப்படுகிறது. இக்காரணங்களால் கடல் கீரி இன்னும் அருகி வரும் இனமாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது.

 src=
கடல் கீரி, மோர்ரோ விரிகுடா, கலிபோர்னியா
 src=
மிதக்கும் கடல் கீரி, மோர்ரோ விரிகுடா, கலிபோர்னியா
 src=
கடல் கீரி, கெனாய் கடனீர் இடுக்கேரி, அலாஸ்கா
 src=
ஜான் வெப்பரின் கடல் கீரி, அநேகமாக 1788ம் ஆண்டு
 src=
கடல் கீரி தன் குட்டியைப் பேணுகிறது. கலிபோர்னியாவில் கிட்டத்தட்ட 3,000 கடல் கீரிகள் உள்ளன. இவை 1938ல் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 50 கீரிகளின் சந்ததி ஆகும்.
 src=
கடல் கீரிகள் கடற்பாசிக் காடுகளில் மேய்ந்து கொண்டிருக்கும் விலங்குகளை சாப்பிடுவதன் மூலம் கடற்பாசிக் காடுகளை ஆரோக்கியமாக வைக்கின்றன

உசாத்துணை

  1. "Enhydra lutris". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2011).
  2. IUCN (International Union for Conservation of Nature) 2015. Enhydra lutris. In: IUCN 2015. The IUCN Red List of Threatened Species. Version 2015.2. http://www.iucnredlist.org. Downloaded on 17 July 2015.
  3. Riedman, M.L.; Estes, James A. (1990). The sea otter (Enhydra lutris): behavior, ecology, and natural history. U.S. Fish and Wildlife Service Biological Report (Report). Washington, D.C. p. 126. Retrieved 27 September 2010.

நூற்பட்டியல்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கடற்கீரி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

கடல் கீரி (Enhydra lutris, Sea otter) என்பது ஒரு கடல் பாலூட்டியாகும். இது வடபசிபிக் பெருங்கடலின் வடக்கு மற்றும் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் காணப்படுகிறது. வயது வந்த கடல் கீரிகள் பொதுவாக 14 முதல் 45 கிலோ வரை எடையுடன் காணப்படுகின்றன. இவையே முஸ்டேலிடாயே குடும்பத்தின் மிகப்பெரிய உறுப்பினர்களாக உள்ளன. ஆனால் கடல் பாலூட்டிகள் மத்தியில் சிறியனவாகவே உள்ளன. பெரும்பாலான கடல் பாலூட்டிகளை போலல்லாமல், கடல் கீரியின் முதன்மை வடிவக் காப்பானது வழக்கத்திற்கு மாறான தடிமனான உரோமப் பாதுகாப்பாகும். இதுதான் விலங்கு இராச்சியத்திலேயே அடர்த்தியானதாகும். இதனால் தரையில் நடக்க முடியும். முழுவதும் பெருங் கடலில் வாழக்கூடிய தன்மை இதற்கு உள்ளது.

கடல் கீரி கடற்கரையோர சூழ்நிலைகளில் வாழ்கிறது. அங்கிருந்து கடல் தளத்திற்கு இரை தேட செல்கிறது. இது பெரும்பாலும் கடலில் காணப்படும் முதுகெலும்பிலிகளை உண்கிறது. அவை கடல் முள்ளெலிகள், பல்வேறு மெல்லுடலிகள் மற்றும் கிரஸ்டசீன்கள், மற்றும் சில மீன் இனங்கள் ஆகும். இவற்றின் உணவு தேடும் மற்றும் உண்ணும் பழக்கவழக்கங்கள் பல்வேறு வகைகளில் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. ஒன்று, இரையின் ஓட்டை உடைக்க இது கற்களைப் பயன்படுத்துகிறது. இவ்வாறு செய்யும் சில பாலூட்டி இனங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் பெரும்பாலான வாழ்விடத்தில் இது ஒரு மைய உயிரினமாகச் செயல்படுகிறது. இது அவ்விடங்களில் வாழவில்லை எனில் கடல் முள்ளெலிகள் எண்ணிக்கையில் அதிகமாகி கெல்ப் காடு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதன் உணவானது மனிதர்களால் விரும்பி உண்ணப்படும் கடல் உயிரினங்களாக உள்ளது. இதனால் இவற்றிற்கும் மீன்பிடிப்பவர்களுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது.

கடல் கீரிகளின் எண்ணிக்கை ஒரு காலத்தில் 150,000–300,000 வரை இருந்ததாக கணக்கிடப்பட்டது. ஆனால் இவற்றின் ரோமத்திற்காக 1741 முதல் 1911 வரை ஏராளமாக வேட்டையாடப்பட்டன. இதனால் உலகளவில் இவற்றின் எண்ணிக்கை 1,000–2,000 வரை என்றானது. இவற்றின் வேட்டைக்கு எதிரான சர்வதேசத் தடை, பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் மறு அறிமுக திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக இவற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது. தற்போது இந்த இனம் இதன் முந்தைய அளவில் மூன்றில் இரண்டு பங்கு இடத்தில் பரவி உள்ளது. அலேடியன் தீவு மற்றும் கலிபோர்னியா ஆகிய இடங்களில் இவற்றின் எண்ணிக்கை தற்போது குறைந்து விட்டது. எனினும் பரவலான இடங்களில் இவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பு ஒரு வெற்றியாக கருதப்படுகிறது. இக்காரணங்களால் கடல் கீரி இன்னும் அருகி வரும் இனமாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது.

 src= கடல் கீரி, மோர்ரோ விரிகுடா, கலிபோர்னியா  src= மிதக்கும் கடல் கீரி, மோர்ரோ விரிகுடா, கலிபோர்னியா  src= கடல் கீரி, கெனாய் கடனீர் இடுக்கேரி, அலாஸ்கா  src= ஜான் வெப்பரின் கடல் கீரி, அநேகமாக 1788ம் ஆண்டு  src= கடல் கீரி தன் குட்டியைப் பேணுகிறது. கலிபோர்னியாவில் கிட்டத்தட்ட 3,000 கடல் கீரிகள் உள்ளன. இவை 1938ல் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 50 கீரிகளின் சந்ததி ஆகும்.  src= கடல் கீரிகள் கடற்பாசிக் காடுகளில் மேய்ந்து கொண்டிருக்கும் விலங்குகளை சாப்பிடுவதன் மூலம் கடற்பாசிக் காடுகளை ஆரோக்கியமாக வைக்கின்றன
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்