பித்திகம் (காட்டு மல்லிகை) என்னும் மலரைப் பித்திகை என்றும் வழங்கினர். அந்தப் பூவின் வெரிந் (முதுகு) பகுதி சிவப்பாக இருக்கும். இந்தப் பூ மாலையில் மலரும். ஆடவர் பித்திக மாலையைச் சூடிக்கொள்வர்.
சங்கப்பாடல்கள் இந்தச் செய்திகளை நமக்குத் தருகின்றன.
பித்திகம் (காட்டு மல்லிகை) என்னும் மலரைப் பித்திகை என்றும் வழங்கினர். அந்தப் பூவின் வெரிந் (முதுகு) பகுதி சிவப்பாக இருக்கும். இந்தப் பூ மாலையில் மலரும். ஆடவர் பித்திக மாலையைச் சூடிக்கொள்வர்.
பித்திகம் மலர் பி.எல்.சாமி போன்ற அறியர்கள் காட்டும் படம்.சங்கப்பாடல்கள் இந்தச் செய்திகளை நமக்குத் தருகின்றன.
பித்திகைப்பூ அரும்பு சிவப்பாக இருக்கும். மகளிரின் கடைக்கண் மழையில் நனைந்த பித்திக மலரின் முதுகுப் பகுதி சிவந்திருப்பது போல இருக்குமாம். வானம் மூட்டமாக இருந்த காலத்தில் பித்திகப்பூ மணம் விசுவதைக் கொண்டு விளக்கேற்றும் தேரம் வந்துவிட்டது எனத் தெரிந்துகொண்டார்களாம். குறிஞ்சிநிலத் தலைவி தன் ஆயத்தாருடன் மலர்களைக் குவித்து விளையாடிய 99 மலர்களில் பித்திகமும் ஒன்று. பித்திக மலர் பசுமையான காம்பு கொண்டது. மலர் குவிந்து விளையாடிய தலைவியைக் கண்ட தலைவன் மார்பில் முத்துமாலையோடு பித்திக மாலையையும் அணிந்திருந்தான். ஆண்மகன் மார்பில் வைரமாலையோடு குளுமையான பித்திகைப்பூ மாலேயையும் அணிவது வழக்கம். பித்திக மலரைப் பறித்து பனையின் பச்சைமடலால் பின்னிய பூக்கூடையில் சேகரிப்பர். உழத்தியர் குருக்கத்திப் பூவையும், பித்திகைப் பூவையும் கலந்து கட்டி அகன்ற வாயுள்ள வட்டி ஏனத்தில் வைத்துக்கொண்டு தெருவில் கூவி விற்பனை செய்வர். இந்திர விழாவில் மாதவி பாடிய கானல்வரிப் பாடலைக் கேட்டுக் கோவலன் பிரிந்தான். நகர நம்பியரோடு திரிந்துகொண்டிருந்தான். இல்லம் திரும்பிய மாதவி கோவனுக்குக் கடிதம் எழுதித் தன் தோழி வயந்தமாலையிடம் கொடுத்து அனுப்பினாள். அந்தக் கடிதத்தை அவள் பித்திகை அரும்பை எழுத்தாணியாகக் கொண்டு தன் மேனியில் பூசியிருந்த செம்பஞ்சுக் குழம்பு மையால் எழுதி அனுப்பினாளாம்.