பாசிலிகஸ் பல்லிகள் (Basilicus Plumidrons)அல்லது ஜீசஸ் பல்லி என்று அழைக்கப்படும் சுறு சுறுப்பற்ற, தளர்ச்சியுற்ற மரம் வாழ் உயிரினம். அமெரிக்காவில் வாழும் தண்ணீரில் நடக்கும் பல்லி இனத்தைச் சேர்ந்த பாலூட்டியாகும். இவை நீரில் நடக்கும் தன்மையை வைத்து மக்கள் இதை ஜீசஸ் பல்லி என்று அழைக்கிறார்கள். கிரேக்க மொழியில் பாசிலிக்கஸ் என்றால் அரசர் எனப் பொருள்படும்.[2][3]
இவை மத்திய அமெரிக்காவில் அதிகம் காணப்படுகின்றன. மரங்களில் அமர்ந்திருக்கும் போது தன்னை இரையாகப் பிடிக்க வரும் மிருகங்களில் இருந்து காத்துக்கொள்ள மரத்தின் அடியில் காணப்படும் நீர்ப் பரப்பில் விழுந்து அதன் மேல் பரப்பில் நடக்கின்றன என்று இவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவற்றின் பரவல் மெக்சிகோவில் இருந்து நில நடுக்கோட்டுப் பிரதேங்கள் வரை காணப்படுகிறது
இந்த பல்லிகள் பிறக்கும் போது இரண்டு கிராமும், பெரிதாக வளர்ந்த பின் 200 கிராம் எடையும் உடையதாக இருக்கிறது. அவைகளின் உருவ அமைப்புக்கேற்ப தண்ணீரில் நடக்கின்றன. அவைகள் தண்ணீரின் மேல் ஒரு நொடிக்கு 5 அடி முதல் 15 அடி வரை ஓடுகின்றன. அதன் பிறகு அவை தண்ணீரில் நீந்தவும் செய்கின்றன. இப்பல்லிகள் தனது காலினால் சக்தியை உருவாக்குகின்றன. அந்த சக்தி காலில் சேமிக்கப்படுகிறது. நடக்கத் தொடங்கும் போது இந்த சக்தியின் உதவியால் தண்ணீரின் மேல் நடப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
பாசிலிகஸ் பல்லி ஓர் அனைத்துண்ணி ஆகும். பூச்சிகள் சிறு பாலூட்டிகள்(கொறினிகள்) சிறிய பல்லிகள், பழங்கள், பூமொட்டுகள், சிறு பறவையினங்கள் மற்றும் பாம்புகளையும் இரையாக உண்கிறது.
பெண் பல்லி ஒரு முறைக்கு ஐந்தும் முதல் பதினைந்து முட்டைகள் வரை இடுகின்றன. மணல் அல்லது மண்ணில் இடப்படும் இதன் முட்டைகளிலிருந்து எட்டு முதல் பத்து வாரங்களுக்குப் பிறகு குட்டிகள் வெளிவருகின்றன. அவை பிறந்தவுடன் தனித்துச் செயல் படுகின்றன.
பாசிலிகஸ் பல்லிகள் (Basilicus Plumidrons)அல்லது ஜீசஸ் பல்லி என்று அழைக்கப்படும் சுறு சுறுப்பற்ற, தளர்ச்சியுற்ற மரம் வாழ் உயிரினம். அமெரிக்காவில் வாழும் தண்ணீரில் நடக்கும் பல்லி இனத்தைச் சேர்ந்த பாலூட்டியாகும். இவை நீரில் நடக்கும் தன்மையை வைத்து மக்கள் இதை ஜீசஸ் பல்லி என்று அழைக்கிறார்கள். கிரேக்க மொழியில் பாசிலிக்கஸ் என்றால் அரசர் எனப் பொருள்படும்.