கொம்பன் சுறா அல்லது சுத்தியல் தலை சுறா (hammerhead shark) என்பது சுறா இனத்தைச் சேர்ந்த ஒரு மீனினமாகும். இதன் தலை சுத்தியலைப்போல இருப்பதால் இதை சுத்தியல் தலை சுறா என்பர். இதன் தலையின் இரண்டு பக்கமும் நீண்ட கொம்புபோன்ற பகுதிகள் இருப்பதால் கொம்பன் சுறா என்பதும் பொருத்தமான பெயராகவுள்ளது. இவ்வின சுறாக்கள் 0.9 முதல் 6 மீட்டர் (3.0 இருந்து 19.7 அடி) நீளமாகவும், 3இல் இருந்து 580 கிலோ எடை உள்ளதாகவும் உள்ளன.[2][3] இம்மீனின் கண்களும், நாசித்துளைகளும் கொம்புபகுதியிலேயே உள்ளன. இதனால் இதன் பார்வை 360 பாகையில் பார்க்கக் கூடியதாக உள்ளது அதாவது இது மேலேயும் அதேசமயம் கீழேயும் ஒரே நேரத்தில் பார்க்கும் வல்லமையைக் கொண்டுள்ளது.[4][5] இது தன் வயிற்றுக்குள்ளேயே முட்டைகளை வைத்திருந்து, குஞ்சுகளை அங்கேயே பொரிக்கவைத்து, குஞ்சுகளை வெளியே ஈனும்.
கொம்பன் சுறா அல்லது சுத்தியல் தலை சுறா (hammerhead shark) என்பது சுறா இனத்தைச் சேர்ந்த ஒரு மீனினமாகும். இதன் தலை சுத்தியலைப்போல இருப்பதால் இதை சுத்தியல் தலை சுறா என்பர். இதன் தலையின் இரண்டு பக்கமும் நீண்ட கொம்புபோன்ற பகுதிகள் இருப்பதால் கொம்பன் சுறா என்பதும் பொருத்தமான பெயராகவுள்ளது. இவ்வின சுறாக்கள் 0.9 முதல் 6 மீட்டர் (3.0 இருந்து 19.7 அடி) நீளமாகவும், 3இல் இருந்து 580 கிலோ எடை உள்ளதாகவும் உள்ளன. இம்மீனின் கண்களும், நாசித்துளைகளும் கொம்புபகுதியிலேயே உள்ளன. இதனால் இதன் பார்வை 360 பாகையில் பார்க்கக் கூடியதாக உள்ளது அதாவது இது மேலேயும் அதேசமயம் கீழேயும் ஒரே நேரத்தில் பார்க்கும் வல்லமையைக் கொண்டுள்ளது. இது தன் வயிற்றுக்குள்ளேயே முட்டைகளை வைத்திருந்து, குஞ்சுகளை அங்கேயே பொரிக்கவைத்து, குஞ்சுகளை வெளியே ஈனும்.