வட்ட-நெசவு சிலந்தி (Orb-weaver spiders or araneids) என்பவை சிலந்தி குடும்பத்தைச் சேர்ந்த அரேனேடாவின் உறுப்பினர்கள். அவை பெரும்பாலும் தோட்டங்கள், வயல்கள், காடுகள் போன்ற இடங்களில் காணப்படும் இவை சுருள் சக்கர வடிவ வலை பின்னக்கூடிய பொதுவான சிலந்திக் குழுவைச் சேர்ந்தவை. "Orb" என்றால் வட்ட வடிவம் என்று பொருள், இதுவே இந்தக் குழுவின் ஆங்கில பெயர் வரக் காரணமாகும். இவை எட்டு ஒத்த கண்களும், இழைகள் கொண்ட எட்டு கால்கள் கொண்டுள்ளன.
இந்த குடும்பத்தில் நன்கு அறிமுகமான பிரகாசமான நிறமுடைய தோட்டச் சிலந்திகள் உள்ளிட்டவை அடங்கும். இதில் உலகளவில் 172 பேரினங்களும் 3122 வகை இனங்களும் உள்ளன. சிலந்திகளில் இந்த குடும்பம் மூன்றாவது பெரிய சிலந்தி குடும்பமாக (குதிக்கும் சிலந்தி மற்றும் லினியீபைடை ஆகியவற்றுக்கு அடுத்து) உள்ளன.
இந்த வகைச் சிலந்திகள் பின்னும் வலையில் ஒட்டக்கூடிய வலை, ஒட்டாத வலை என கலந்து பின்னுகின்றன. இரையைப் பிடிக்கும் இழை ஒட்டக்கூடியதாகவும், சிலந்தி நகர்ந்து செல்லக் கைடியவை ஒட்டாத இழையாகவும் இருக்கும். இவை எப்போதும் ஒட்டாத இழையிலேயே கவனமாகக் கால் வைத்து செல்லும். பொதுவாக இதுபோன்ற சிலந்திகள் வலையின் ஒரு மூலையில் மறைந்திருக்கும். வலையில் இரை அகப்பட்டவுடன் வலையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்துகொண்டு ஓடிவந்து இரையைப் பிடித்து உண்ணும்.[3]
வட்ட-நெசவு சிலந்தி (Orb-weaver spiders or araneids) என்பவை சிலந்தி குடும்பத்தைச் சேர்ந்த அரேனேடாவின் உறுப்பினர்கள். அவை பெரும்பாலும் தோட்டங்கள், வயல்கள், காடுகள் போன்ற இடங்களில் காணப்படும் இவை சுருள் சக்கர வடிவ வலை பின்னக்கூடிய பொதுவான சிலந்திக் குழுவைச் சேர்ந்தவை. "Orb" என்றால் வட்ட வடிவம் என்று பொருள், இதுவே இந்தக் குழுவின் ஆங்கில பெயர் வரக் காரணமாகும். இவை எட்டு ஒத்த கண்களும், இழைகள் கொண்ட எட்டு கால்கள் கொண்டுள்ளன.
இந்த குடும்பத்தில் நன்கு அறிமுகமான பிரகாசமான நிறமுடைய தோட்டச் சிலந்திகள் உள்ளிட்டவை அடங்கும். இதில் உலகளவில் 172 பேரினங்களும் 3122 வகை இனங்களும் உள்ளன. சிலந்திகளில் இந்த குடும்பம் மூன்றாவது பெரிய சிலந்தி குடும்பமாக (குதிக்கும் சிலந்தி மற்றும் லினியீபைடை ஆகியவற்றுக்கு அடுத்து) உள்ளன.
இந்த வகைச் சிலந்திகள் பின்னும் வலையில் ஒட்டக்கூடிய வலை, ஒட்டாத வலை என கலந்து பின்னுகின்றன. இரையைப் பிடிக்கும் இழை ஒட்டக்கூடியதாகவும், சிலந்தி நகர்ந்து செல்லக் கைடியவை ஒட்டாத இழையாகவும் இருக்கும். இவை எப்போதும் ஒட்டாத இழையிலேயே கவனமாகக் கால் வைத்து செல்லும். பொதுவாக இதுபோன்ற சிலந்திகள் வலையின் ஒரு மூலையில் மறைந்திருக்கும். வலையில் இரை அகப்பட்டவுடன் வலையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்துகொண்டு ஓடிவந்து இரையைப் பிடித்து உண்ணும்.