dcsimg

ஐரோப்பிய இடலை ( Tamil )

provided by wikipedia emerging languages
 src=
19 ஆம் நூற்றாண்டு ஓவியம்

ஐரோப்பிய இடலை (Olea europea) என்பது நடுநிலக் கடல் வடிபகுதியில் காணப்படும் சிறு மர வகையாகும். இது இடலை என்ற பேரினத்தின் மாதிரி இனம் ஆகும். இதன் உயரம் 8–15 மீட்டர் அளவு வளரும். இதன் இலைகள் 4–10 செ.மீ. நீளமும் 1–3 செ.மீ. அகலமும் இருக்கும். இதன் பட்டை முறுங்கி வளரும். இவற்றின் பழங்கள் சற்றுத் துவர்ப்பானவை.

ஐரோப்பிய இடலைப் பழம் 1–2.5 cm நீளமும், தட்டையான சதை கொண்டுள்ளது. அது பிஞ்சு நிலையில் பச்சை நிறமும் பழுத்த நிலையில் கருப்பாக இருக்கும். இது உலகில் பரவலாகப் பயிரிடப்படும் பழங்களில் ஒன்றாகும். இதன்மூலம் இடலை எண்ணெய் தயாரிக்கப்படுகின்றது.[1]

சொல்லியல்

Olea europaea என்றால் இலத்தீன் மொழியில் ஐரோப்பிய இடலை என்று பொருள். ஐரோப்பாவில் காணப்படும் இடலை இனம் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.

வகைப்பாடு

ஐரோப்பிய இடலை இனத்தில் மொத்தம் ஆறு துணையினங்கள் உள்ளன.

  • ஐரோப்பிய இடலை சிற்றினம் ஐரோப்பியம் (Olea europaea subsp. europaea)
  • ஐ. இ. சிற். கூர்முனை (O. e. subsp. cuspidata)
  • ஐ. இ. சிற். வாஞ்ச்சியம் (O. e. subsp. guanchica)
  • ஐ. இ. சிற். செர்ரிவடிவி (O. e. subsp. cerasiformis)
  • ஐ. இ. சிற். மொரோக்கோனியம் (O. e. subsp. maroccana)
  • ஐ. இ. சிற். லப்பெர்ரின் (O. e. subsp. laperrinei)

வரலாறு

ஐரோப்பிய இடலை மரங்கள் கடந்த 2000 ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகின்றன. இத்தாலி நாட்டில் சாந்தினியாவில் உள்ள சில மரங்கள் 3000 ஆண்டுகள் பழமை கொண்டதாகக் கருதப்படுகிறது. தூத்தான்காமென் என்ற அரசரின் கல்லறையிலும் இம்மரத்தின் உருவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 20-40 மில்லியன் ஆண்டுகள் பழைமையான இதன் புதை படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

பிறமொழிப் பெயர்கள்

மேற்கோள்கள்

  1. "FAO, 2004". Apps3.fao.org. பார்த்த நாள் 2009-05-18.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

ஐரோப்பிய இடலை: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages
 src= 19 ஆம் நூற்றாண்டு ஓவியம்

ஐரோப்பிய இடலை (Olea europea) என்பது நடுநிலக் கடல் வடிபகுதியில் காணப்படும் சிறு மர வகையாகும். இது இடலை என்ற பேரினத்தின் மாதிரி இனம் ஆகும். இதன் உயரம் 8–15 மீட்டர் அளவு வளரும். இதன் இலைகள் 4–10 செ.மீ. நீளமும் 1–3 செ.மீ. அகலமும் இருக்கும். இதன் பட்டை முறுங்கி வளரும். இவற்றின் பழங்கள் சற்றுத் துவர்ப்பானவை.

ஐரோப்பிய இடலைப் பழம் 1–2.5 cm நீளமும், தட்டையான சதை கொண்டுள்ளது. அது பிஞ்சு நிலையில் பச்சை நிறமும் பழுத்த நிலையில் கருப்பாக இருக்கும். இது உலகில் பரவலாகப் பயிரிடப்படும் பழங்களில் ஒன்றாகும். இதன்மூலம் இடலை எண்ணெய் தயாரிக்கப்படுகின்றது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்