கல் மீன் என்பது சினான்சீடே குடும்பத்தைச் சேர்த்த மீன் இனம் ஆகும். இந்த இனத்தைச் சேர்ந்த மீன்கள் அனைத்தும் கொடிய நஞ்சு கொண்டவையாக உள்ளன. இதுவரை அறியப்பட்ட மீன்களில் கல் மீன்களே அதிக நஞ்சு கொண்ட மீன்களாகும். [1][2] இவை இந்திய-பசிபிக் கடல்களில் காணப்படுகின்றன. கல் மீன்களில் மொத்தம் 5 இனங்கள் உள்ளன.
கல் மீன்கள் பெரும்பாலும் கடலில் வாழும் உயிரினம் ஆகும். எனினும் சில இனங்கள் நன்னீர் அல்லது கழிமுகம் போன்ற நீர்நிலைகளிலும் வாழ்கின்றன. இவற்றின் ஊசி போன்ற முள் துடுப்புகளின் கீழே நஞ்சு நிரம்பிய பைகள் அமைந்துள்ளன. இது எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதற்கும் இரையைக் கொல்வதற்கும் உதவுகின்றது. இவை பார்ப்பதற்கு கல் போன்று தோற்றமளிப்பதால் கல் மீன் என்று அழைக்கப்படுகிறது.
கல் மீன் என்பது சினான்சீடே குடும்பத்தைச் சேர்த்த மீன் இனம் ஆகும். இந்த இனத்தைச் சேர்ந்த மீன்கள் அனைத்தும் கொடிய நஞ்சு கொண்டவையாக உள்ளன. இதுவரை அறியப்பட்ட மீன்களில் கல் மீன்களே அதிக நஞ்சு கொண்ட மீன்களாகும். இவை இந்திய-பசிபிக் கடல்களில் காணப்படுகின்றன. கல் மீன்களில் மொத்தம் 5 இனங்கள் உள்ளன.