dcsimg

காட்டு வான்கோழி ( Tamil )

provided by wikipedia emerging languages

காட்டு வான்கோழி (ஆங்கிலப் பெயர்: wild turkey, உயிரியல் பெயர்: Meleagris gallopavo) என்பது வட அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட, கல்லிபார்மசு வரிசையைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். கல்லிபார்மசு வரிசைப்பறவைகளிலேயே இதுதான் அதிக எடையுள்ளது ஆகும். இதுவும் வளர்ப்பு வான்கோழியும் ஒரே இனம் ஆகும். வளர்ப்பு வான்கோழியானது தெற்கு மெக்சிகக் காட்டு வான்கோழித் துணையினத்தில் இருந்து உருவானது ஆகும். இது வட அமெரிக்காவில் தோன்றியது என்றாலும், வளர்ப்பு வான்கோழியானது இசுப்பெயின் வழியாக லெவன்டில் இருந்து பிரித்தானியாவிற்கு கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டது. அந்நேரத்தில் பிரித்தானிய மக்கள் காட்டு வான்கோழியை துருக்கி நாட்டுடன் தொடர்புபடுத்தி அழைத்தனர். இவ்வாறாகவே இதன் ஆங்கிலப் பெயர் உருவானது.[2][3][4]

குறிப்புகள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

காட்டு வான்கோழி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

காட்டு வான்கோழி (ஆங்கிலப் பெயர்: wild turkey, உயிரியல் பெயர்: Meleagris gallopavo) என்பது வட அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட, கல்லிபார்மசு வரிசையைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். கல்லிபார்மசு வரிசைப்பறவைகளிலேயே இதுதான் அதிக எடையுள்ளது ஆகும். இதுவும் வளர்ப்பு வான்கோழியும் ஒரே இனம் ஆகும். வளர்ப்பு வான்கோழியானது தெற்கு மெக்சிகக் காட்டு வான்கோழித் துணையினத்தில் இருந்து உருவானது ஆகும். இது வட அமெரிக்காவில் தோன்றியது என்றாலும், வளர்ப்பு வான்கோழியானது இசுப்பெயின் வழியாக லெவன்டில் இருந்து பிரித்தானியாவிற்கு கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டது. அந்நேரத்தில் பிரித்தானிய மக்கள் காட்டு வான்கோழியை துருக்கி நாட்டுடன் தொடர்புபடுத்தி அழைத்தனர். இவ்வாறாகவே இதன் ஆங்கிலப் பெயர் உருவானது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்