நீர் உடும்பு (water monitor) என்பது ஒரு பெரிய உடும்பு இனமாகும். இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியா.பகுதிகளில் இலங்கை, இந்தியா முதல் இந்தோசீனா , மலாய் தீபகற்பற்பம், இந்தோனேசியாவின் பல்வேறு தீவுகளில் நீர் சார்ந்த பகுதிகளில் வாழுகின்றது.
இவை ஒரு அனைத்துண்ணி, குளிர் இரத்தப்பிராணி ஆகும். இவ்வினங்கள் மலேய நீர் உடும்பு, ஆசிய நீர் உடும்பு, சாதாரண நீர் உடும்பு, இரு பட்டை நீர் உடும்பு, அரிசி பல்லி, மோதிரப் பல்லி, வெற்று பல்லி, குறியில்லா பல்லி என பலவாறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், நீர் உடும்பு என பொதுவாக அழைக்கப்படுகிறது.[2]
இது கூரான தலையும், மெல்லிய கழுத்தும், கொண்டது. 40 செமீ (16 அங்குளம்) நீளமும், 1 கி.கி எடையும் கொண்டவை.பெண் உடும்புகள் 50 செமீ (20 அங்குளம்) நீளம் கொண்டவை. எவ்வாறாயினும் இவை தம்வாழ்நாளில் அதிகமாக வளர்கின்றன. ஆண் உடும்புகள் பெண் உடும்புகளைவிட பெரியதாக வளர்கின்றன.[3] சில உடும்புகள் அரிதாக 1.5–2 மீட்டர் (4.9–6.6 அடி) நீளம்வரை காணப்படுகின்றன.[4] இலங்கையில் ஒரு பதிவின்படி 3.21 மீட்டர் (10.5 அடி) நீள நீர் உடும்பு காணப்பட்டது. சாதாரணமாக இவற்றின் எடை 19.5 கி.கி வரை இருக்கும்.[3][5]
நீர் உடும்பு (water monitor) என்பது ஒரு பெரிய உடும்பு இனமாகும். இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியா.பகுதிகளில் இலங்கை, இந்தியா முதல் இந்தோசீனா , மலாய் தீபகற்பற்பம், இந்தோனேசியாவின் பல்வேறு தீவுகளில் நீர் சார்ந்த பகுதிகளில் வாழுகின்றது.
இவை ஒரு அனைத்துண்ணி, குளிர் இரத்தப்பிராணி ஆகும். இவ்வினங்கள் மலேய நீர் உடும்பு, ஆசிய நீர் உடும்பு, சாதாரண நீர் உடும்பு, இரு பட்டை நீர் உடும்பு, அரிசி பல்லி, மோதிரப் பல்லி, வெற்று பல்லி, குறியில்லா பல்லி என பலவாறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், நீர் உடும்பு என பொதுவாக அழைக்கப்படுகிறது.