dcsimg
Image of Chestnut Dioon
Creatures » » Plants » » Gymnosperms » » Cycad Family »

Chestnut Dioon

Dioon edule Lindl.

டையூன் இடுலி ( Tamil )

provided by wikipedia emerging languages

டையூன் இடுலி (Dioon edule) என்பது ஒரு தாவரமாகும். இது மெக்சிக்கோவைச் சேர்ந்தது. இது பால்மா டி லா வர்ஜன் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தாவரவகை மிக பழமையான விதை தாவரமாகும். இவைற்றின் புதைபடிவங்கள் டைனோசர் வாழ்ந்த காலத்திலேயே கிடைக்கின்றன.[2] இது Zamiaceae என்ற தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த்தாகும். இது Cycadales என்ற பேரினத்தைச் சேர்ந்தது.

இதில் இரண்டு கிளையினங்கள் உள்ளதாக அறியப்படுகிறது. அவை பின்வருமாறு,

  • Dioon edule subsp. augustifolium
  • Dioon edule subsp. edule

இந்த மரம்தான் உலகில் மிக மிக மெதுவாக வளரக்கூடிய மரமாகும். மெக்சிகோ நாட்டின் தேசியப் பூங்காவில் உள்ள ஒரு மரம் ஆறு அடி ஆறு அங்குலம் வளர 1000 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. மெக்சிகோவிலிருந்து இதன் விதை கொண்டுவரப்பட்டு, ஏற்காடு தாவரவியல் பூங்காவில் 1990 இல் ஒரு கன்று உருவாக்கப்பட்டது. இது நடப்படுடு 25 ஆண்டுகள் ஆன நிலையிலும் சில அங்குல உயரம் மட்டுமே வளர்ந்துள்ளது. இந்தத் தாவரத்தின் அடிப்பாகம்கூட, இன்னமும் தரையைவிட்டு வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.[3]

மேற்கோள்கள்

  1. In: Edwards's Botanical Register 29: misc. 59-60. 1843. "Name - Dioon Lindl.". Tropicos. Saint Louis, Missouri: Missouri Botanical Garden. பார்த்த நாள் February 15, 2010. "Annotation: as 'Dion' ; orth. & nom. cons.
    Type Specimen: Dioon edule Lindl."
  2. The United States Botanical Garden
  3. "ஏற்காட்டின் பசுமை அற்புதங்கள்". தி இந்து (தமிழ்) (செப்டம்பர், 5, 2015). பார்த்த நாள் 25 ஏப்ரல் 2016.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

டையூன் இடுலி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

டையூன் இடுலி (Dioon edule) என்பது ஒரு தாவரமாகும். இது மெக்சிக்கோவைச் சேர்ந்தது. இது பால்மா டி லா வர்ஜன் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தாவரவகை மிக பழமையான விதை தாவரமாகும். இவைற்றின் புதைபடிவங்கள் டைனோசர் வாழ்ந்த காலத்திலேயே கிடைக்கின்றன. இது Zamiaceae என்ற தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த்தாகும். இது Cycadales என்ற பேரினத்தைச் சேர்ந்தது.

இதில் இரண்டு கிளையினங்கள் உள்ளதாக அறியப்படுகிறது. அவை பின்வருமாறு,

Dioon edule subsp. augustifolium Dioon edule subsp. edule

இந்த மரம்தான் உலகில் மிக மிக மெதுவாக வளரக்கூடிய மரமாகும். மெக்சிகோ நாட்டின் தேசியப் பூங்காவில் உள்ள ஒரு மரம் ஆறு அடி ஆறு அங்குலம் வளர 1000 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. மெக்சிகோவிலிருந்து இதன் விதை கொண்டுவரப்பட்டு, ஏற்காடு தாவரவியல் பூங்காவில் 1990 இல் ஒரு கன்று உருவாக்கப்பட்டது. இது நடப்படுடு 25 ஆண்டுகள் ஆன நிலையிலும் சில அங்குல உயரம் மட்டுமே வளர்ந்துள்ளது. இந்தத் தாவரத்தின் அடிப்பாகம்கூட, இன்னமும் தரையைவிட்டு வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்