ரைசோபியம் (Rhizobium) என்பது மண்ணில் நைட்ரசன் நிலைப்படுத்துதலில் ஈடுபடக்கூடிய ஒரு பாக்டீரியா பேரினம் ஆகும். இருபுற வெடிக்கனி தாவரங்களில் அவற்றின் வேர்முண்டுகளில் அவற்றின் உள்ளுறைக் கூட்டுயிராக இருந்து நைட்ரசன் நிலைப்படுத்துதலில் ஈடுபடுகிறது. இவ்வகை பாக்டீரியாக்கள் வேர்முண்டுகளில் இருந்து கொண்டு நைட்ரோசெனேசு என்ற நொதியின் உதவியுடன் வளிமண்டல நைட்ரசனை அமோனியாவாக மாற்றி பின்னர் குளூட்டமின் அல்லது யூரைடுகள் போன்ற கரிம நைட்ரசன் சேர்மங்களாக மாற்றி தாவரங்களுக்கு வழங்குகின்றன. மாற்றாக, தாவரமானது, ஒளிச்சேர்க்கையின் மூலம் தயாரிக்கப்பட்ட கரிமச்சேர்மங்களை பாக்டீரியாக்களுக்குத் தருகிறது. [1]
ரைசோபியம் (Rhizobium) என்பது மண்ணில் நைட்ரசன் நிலைப்படுத்துதலில் ஈடுபடக்கூடிய ஒரு பாக்டீரியா பேரினம் ஆகும். இருபுற வெடிக்கனி தாவரங்களில் அவற்றின் வேர்முண்டுகளில் அவற்றின் உள்ளுறைக் கூட்டுயிராக இருந்து நைட்ரசன் நிலைப்படுத்துதலில் ஈடுபடுகிறது. இவ்வகை பாக்டீரியாக்கள் வேர்முண்டுகளில் இருந்து கொண்டு நைட்ரோசெனேசு என்ற நொதியின் உதவியுடன் வளிமண்டல நைட்ரசனை அமோனியாவாக மாற்றி பின்னர் குளூட்டமின் அல்லது யூரைடுகள் போன்ற கரிம நைட்ரசன் சேர்மங்களாக மாற்றி தாவரங்களுக்கு வழங்குகின்றன. மாற்றாக, தாவரமானது, ஒளிச்சேர்க்கையின் மூலம் தயாரிக்கப்பட்ட கரிமச்சேர்மங்களை பாக்டீரியாக்களுக்குத் தருகிறது.