ஓந்தி (Dragon lizard) என்பது ஓந்திவகையி (Agamidae) என்ற குடும்பத்தில் உள்ள பல்லி இனங்களைக் குறிக்கும் பொதுப்பெயர் ஆகும். இதில் மொத்தம் 300க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இவை ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களிலும் ஒருசில இனங்கள் தென் ஐரோப்பாவிலும் காணப்படுகின்றன.
ஓந்தியின் தோற்றம் மற்றும் வடிவம் பேரோந்தி போன்று இருக்கும். பொதுவாக இவை நன்கு வளர்ந்த வலிமையான கால்களைக் கொண்டு இருக்கும். மற்ற பல்லி இனங்கள் போன்று இவற்றால் தங்களின் வாலை மீட்டுவிக்க இயலாது. இருப்பினும் ஒருசில ஓந்தி இனங்களில் இந்தப் பண்பு குறைவாகக் காணப்படுகிறது.[1][2] பெரும்பாலான ஓந்தி இனங்கள் தங்கள் உடல் வெப்பத்தை சீர்படுத்துவதற்காக நிறம் மாறும் திறன் பெற்றுள்ளன. [3]