தெமின்க் கொசு உள்ளான் (Calidris temminckii) என்பது ஒரு சிறிய கரையோரப் பறவை ஆகும். இதன் பொதுப் பெயர் மற்றும் லத்தீன் இருசொற் பெயர் டச்சு இயற்கை ஆர்வலர் கோன்ராடு தெமின்க் என்பாரின் நினைவாக இடப்பட்டுள்ளது.
இந்தப் பறவைகள் மிகவும் சிறிய கரையோரப் பறவைகள் ஆகும்; இவற்றின் நீளம் 13.5 - 15 செமீ. ஏறக்குறைய இதே அளவு உள்ள கொசு உள்ளானை (Calidris minuta) விட குறுகிய கால்களையும் சற்று நீண்ட இறக்கைகளையும் கொண்டவை. தெமின்க் உள்ளானின் கால்கள் மஞ்சள் நிறமாகவும் வெளிப்புற வால் இறகுகள் வெள்ளையாகவும் இருக்கும்; மாறாக கொசு உள்ளானின் கால்கள் கருத்தும் வெளிப்புற வால் இறகுகள் சாம்பல் நிறமாகவும் இருக்கும்.