dcsimg

பீர்க்கு பேரினம் ( Tamil )

provided by wikipedia emerging languages

பீர்க்கு பேரினம் எனப்படும் (Luffa) இது உணவாகப் பயன்படும் ஒரு வகை தாவரப்பேரினம் ஆகும். இது ஒரு படர்கொடி தாவரம். இது கூட்டு, பொறியல் என பல வகையாக சமைக்கக் கூடியது.

பீரம்

பீரம் என்பது பீர்க்கம்பூ.

சங்கப் பாடல்களில் பீரம்
  • குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடியதாகக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று பீரம்.[1]
  • புதரில் ஏறி மலரும் பீரம்பூ பொன்னிறம் கொண்டிருக்கும்.[2][3]
  • மணம் இல்லாத பூ.[4]

காதலன் பிரிவால் காதலியின் மேனியில் பீர் நிறம் தோன்றும் என்பர்.[5][6][7][8]

மகசூல்

பீர்க்கங்காய் விவசாயம் சுலபமானது, மிக குறைந்த நாளில் பலன் தரக்கூடியது.விதை முளைப்பிலிருந்து 35வது நாளில் மகசூல் ஆரம்பமாகின்றது.

வேறு பயன்கள்

மருத்துவ குணம் உடைய இக்காய் முற்றிய நிலையில் உலர்ந்தபின் தோல் மற்றும் விதைகளை நீக்கி எஞ்சிய நார்ப்பகுதி குளியலுக்கு உடலை தேய்த்து உதவ பயன்படுகிறது.

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. குறிஞ்சிப்பாட்டு 92
  2. வான்பூப் பொன்போல் பீரொடு புதல்புதல் மலர - நெடுநல்வாடை 14
  3. கண் எனக் கருவிளை மலரப், பொன் என இவர்கொடிப் பீரம் இரும்புதல் மலரும். - ஐங்குறுநூறு 464
  4. தாதுபடு பீரம் ஊதி நாற்றம் இன்மையின் - நற்றிணை 277
  5. இவட்கே நுண்கொடிப் பீரத்து ஊழுறு பூ எனப் பசலை ஊரும் - நற்றிணை 326
  6. இன்னள் ஆயினள் நன்னுதல் … நம் படப்பை நீர்வார் பைம்புதல் கலித்த மாரிப் பீரத்து அலர் சில கொண்டே - குறுந்தொகை 98
  7. காடு இறந்தனரே காதலர், மாமை அரி நுண் பசலை பாஅய்ப் பீரத்து எரிமலர் புரைதல் வேண்டும் - அகநானூறு 45-8
  8. மாரிப் பீரத்து அலர்வண்ணம், மடவாள் கொள்ள - சிலப்பதிகாரம் 7-பாடல்38

வெளி இணப்புகள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

பீர்க்கு பேரினம்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

பீர்க்கு பேரினம் எனப்படும் (Luffa) இது உணவாகப் பயன்படும் ஒரு வகை தாவரப்பேரினம் ஆகும். இது ஒரு படர்கொடி தாவரம். இது கூட்டு, பொறியல் என பல வகையாக சமைக்கக் கூடியது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்