கருப்பு மூக்குக்கொம்பன், மூக்குக்கொம்பன் என்னும் பெரும் விலங்குப் பேரினத்தில் உள்ள ஓர் விலங்கு இனம். இது இன்று இயற்கையில் கிழக்கு, நடு, தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் நாடுகளாகிய கென்யா, தான்சானியா, காமரூன், தென் ஆப்பிரிக்கா, நமீபியா, சிம்பாபுவே ஆகியவற்றில் மட்டும் காணப்படும் விலங்கு. இவ்விலங்கின் வாழிடப் பரப்பை வலப்புறம் உள்ள நிலப்படத்தில் காணலாம். காண்டாமிருகம் என்றால் மிகப்பெரிய விலங்கு என்று பொருள் (காண்டா = மிகப்பெரிய; மிருகம் = விலங்கு).கறுப்பு காண்டாமிருகத்தின் எடை 800 கிராம் முதல் 1364 கிராம் வரை இருக்கும். இதன் பருத்த உடலின் உயரம் 140–170 செமீ இருக்கும். இவ்விலங்குக்குக் கறுப்பு என்னும் முன்னொட்டு இருந்தாலும், இதன் நிறம் பெரும்பாலும் கருஞ்சாம்பல் அல்லது பழுப்பு நிறம் கொண்டது. மூக்கின்ன் மீது இருக்கும் இரண்டு கொம்புகளும் நகம், மயிர் போன்ற பகுதிகளில் உள்ளது போன்ற நகமியம் (அல்லது கெரட்டின்) என்னுமகெட்டியான பொருளால் ஆனது. இவை நிலத்தைத் தோண்டவும், புதர்களை அடியோடு தோண்டி எடுத்தெறியவும் பயன்படுகின்றன.
இன்று உலகில் இவ்விலங்கினம் அற்றுப்போகும் நிலையில் உள்ளது. உலகில் மொத்தம் ஏறத்தாழ 3,600 விலங்குகள்தான் உள்ளன. உலக உயிரின நிலைப்பேறு ஒன்றியம் (The World Conservation Union, IUCN) சூலை 7 2006 அன்று அறிவித்தபடி மேற்கு கறுப்பு காண்டாமிருகம் என்னும் உள்ளினம் முற்றிலும் அற்றுவிட்டதாக அப்போதைக்கான தகவல்படி அறிவித்தது[3].
கருப்பு மூக்குக்கொம்பன், மூக்குக்கொம்பன் என்னும் பெரும் விலங்குப் பேரினத்தில் உள்ள ஓர் விலங்கு இனம். இது இன்று இயற்கையில் கிழக்கு, நடு, தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் நாடுகளாகிய கென்யா, தான்சானியா, காமரூன், தென் ஆப்பிரிக்கா, நமீபியா, சிம்பாபுவே ஆகியவற்றில் மட்டும் காணப்படும் விலங்கு. இவ்விலங்கின் வாழிடப் பரப்பை வலப்புறம் உள்ள நிலப்படத்தில் காணலாம். காண்டாமிருகம் என்றால் மிகப்பெரிய விலங்கு என்று பொருள் (காண்டா = மிகப்பெரிய; மிருகம் = விலங்கு).கறுப்பு காண்டாமிருகத்தின் எடை 800 கிராம் முதல் 1364 கிராம் வரை இருக்கும். இதன் பருத்த உடலின் உயரம் 140–170 செமீ இருக்கும். இவ்விலங்குக்குக் கறுப்பு என்னும் முன்னொட்டு இருந்தாலும், இதன் நிறம் பெரும்பாலும் கருஞ்சாம்பல் அல்லது பழுப்பு நிறம் கொண்டது. மூக்கின்ன் மீது இருக்கும் இரண்டு கொம்புகளும் நகம், மயிர் போன்ற பகுதிகளில் உள்ளது போன்ற நகமியம் (அல்லது கெரட்டின்) என்னுமகெட்டியான பொருளால் ஆனது. இவை நிலத்தைத் தோண்டவும், புதர்களை அடியோடு தோண்டி எடுத்தெறியவும் பயன்படுகின்றன.
இன்று உலகில் இவ்விலங்கினம் அற்றுப்போகும் நிலையில் உள்ளது. உலகில் மொத்தம் ஏறத்தாழ 3,600 விலங்குகள்தான் உள்ளன. உலக உயிரின நிலைப்பேறு ஒன்றியம் (The World Conservation Union, IUCN) சூலை 7 2006 அன்று அறிவித்தபடி மேற்கு கறுப்பு காண்டாமிருகம் என்னும் உள்ளினம் முற்றிலும் அற்றுவிட்டதாக அப்போதைக்கான தகவல்படி அறிவித்தது.