மீசை ஆலா (''Chlidonias hybrida''—Whiskered tern) என்பது நீள் சிறகு கடற்பறவையின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை ஆலா ஆகும். இதன் பேரினப் பெயரான Chlidonias தகைவிலானைப் போல என்ற பொருளிலும் சிற்றினப் பெயரான hybrida 'கலப்பு இனம்' என்ற பொருளிலும் இடப்பட்டுள்ளன.[2]
23 - 25 செமீ (10 இன்ச்) நீளம் உடையது; அலகு கருஞ்சிவப்பு நிறம் (இனப்பெருக்க காலத்தில்), நுனியில் பழுப்பு நிறம்; விழித்திரை பழுப்பு, சிறிய கால்கள் இலேசான சிவப்பு நிறத்திலிருக்கும்.
இது ஒரு ஒல்லியான, நளினமான ஆலா. இனப்பெருக்க காலம் தவிர, சாம்பல் கலந்த வெண்ணிற உடல்; இரண்டாகப் பிளவுபட்ட சாம்பல் நிற வால் உடையது. நீரின் மேல் பறந்து கொண்டே இருக்கும். குளிர்காலத்தில் தலைக்கவசத்தில் கரு மச்சம் போன்று காணப்படும்; கோடையில் ஒளிரும் கருப்புக் கவசம் கொண்டிருக்கும், அதனடியில் பனி போன்ற வெண்ணிற கன்னம் தெரிவதால் மீசை ஆலா எனப் பெயர் பெற்றது.
மீசை ஆலா (''Chlidonias hybrida''—Whiskered tern) என்பது நீள் சிறகு கடற்பறவையின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை ஆலா ஆகும். இதன் பேரினப் பெயரான Chlidonias தகைவிலானைப் போல என்ற பொருளிலும் சிற்றினப் பெயரான hybrida 'கலப்பு இனம்' என்ற பொருளிலும் இடப்பட்டுள்ளன.